Thursday, October 8, 2009

ஙே pakkanggaL

நானும் என் எட்டு வயது பெண் ஷ்ருதி-யும் ஆதித்யா சேனல் பார்த்துக்கொன்டிருந்தோம். விவேக் இன் பெண் வேடமிட்டு வரும் நகைச்சுவை காட்சி ஓடிக்கொண்டிருந்தது. அதில் இன்னொரு நடிகர் (அவர் பெயர் தெரியவில்லை) தன் காதலை விவேக்-யிடம் ப்ரொபொஸ் பண்ணுவார். அதற்கு விவேக் தான் ஒரு விதவை என்பார். அதை கேட்டவுடன் என் பெண் தன் கேள்வி கணைகளை வரிசையாக தொடுக்க ஆரம்பித்தாள், அம்மா, விதவைன்னா என்ன?
நானும் என்னால் முடிந்தவரை சுருக்கமாக விளக்கினேன் உடனெ அடுத்த கேள்வி வந்து விழுந்தது
அப்போ பாய்ஸ்-க்கு என்ன சொல்வாங்க?
ஙே என்று விழித்தாள் என்று சில கதைகளில் வரும். நானும் அப்படித்தான் அன்று விழித்தேன்?
உங்களில் யாரிடமேனும் அதற்க்கு பதில் உள்ளதா?

Thursday, September 17, 2009

வந்துட்டேனே மதுரை வீரன் பொம்மி நானே

ஆச்சி அக்கா நானும் பதிவுலகிற்கு வந்துட்டேனே, லேசான உதறல் இருக்கு, யாரையும் காயப்படுத்தாம எழுதனும்னு என்ற பயம் இருக்கு. மற்றப்படி உங்க எல்லோரையும் கண்டிப்பா அறுத்து தள்ளனும்னு ஒரு நல்ல எண்ணமும் இருக்கு.
அதனால நீங்க எல்லாம் இப்ப கண்டிப்பா எனக்கு ஆதரவு தந்து வோட்டு போடறீங்க இல்ல நான் ரொம்ப terror ஆகிடுவேன் . ஆமாம் சொல்லிட்டேன். மற்ற விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை.